News October 20, 2025

NATIONAL ROUNDUP: தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் சேதம்

image

*ஜம்மு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்
*பிஹார் தேர்தலையொட்டி 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து ஓவைசி கட்சி
*உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் எரிந்து சேதம்
*தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக குறைக்க மசோதா நிறைவேற்றப்படும் என அறிவித்த CMரேவந்த் ரெட்டி

Similar News

News March 24, 2026

தமிழ்நாடு முதலிடம் – திருச்சி எம்எல்ஏ அறிக்கை!

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவிலேயே அதிக அளவிலான நடமாடும் மருத்துவ வாகனங்களை இயக்கும் மாநிலங்களின் பட்டியலில், 425 வாகனங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் 31% தமிழகம் மட்டுமே தனித்து இயக்குவது, மாநில அரசின் மக்கள் பணிக்கு கிடைத்த மாபெரும் இமாலய வெற்றி” என தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

டிரம்ப்பின் மூக்கை உடைத்த ஈரான்

image

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதால் <<19457456>>5 நாள்கள்<<>> தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. நிதி, எண்ணெய் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து தப்பவே டிரம்ப் இப்படி போலி செய்திகளை பரப்புகிறார் என கூறிய ஈரான் சபாநாயகர் கலிபாஃப், எச்சரிக்கைக்கு டிரம்ப் பணிந்துவிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.

News March 24, 2026

BREAKING: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது தவெக

image

கூட்டணிக்காக மீண்டும் திருமாவளவனுக்கு தவெக தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக – விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், 10+1(ராஜ்யசபா) சீட் வழங்க வேண்டும் என விசிக நிர்வாக குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதிய சீட், உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் திருமாவிடம் தவெகவினர் பேசியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!