News August 16, 2024
நித்யா மேனனுக்கு தேசிய விருது

திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது ஜானி, சதீஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளர் தேசிய விருது அன்பறிவ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.
News December 4, 2025
அன்புமணி போலி ஆவணங்களை சமர்பித்தாரா?

பாமக தலைவராக அன்புமணி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் டெல்லி HC-ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அன்புமணி சமர்பித்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டே அவரை தலைவராக அங்கீகரித்ததாக EC விளக்கமளித்துள்ளது. ஆனால், அந்த ஆவணங்கள் போலியானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அன்புமணி தலைவர் இல்லையெனில் அதற்கான ஆவணங்களுடன் உரிமையியல் கோர்ட்டை ராமதாஸ் தரப்பு அணுகலாம் என EC தெரிவித்துள்ளது.
News December 4, 2025
டெல்லி காற்று மாசு: பிரியங்கா ஆவேசம்!

டெல்லி காற்று மாசுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேட்டியளித்த பிரியங்கா காந்தி, குழந்தைகள், முதியவர்கள் மூச்சு விடவே சிரமப்படுவதாக தெரிவித்தார். ஒருவரையொருவர் குறை சொல்ல இது வெறும் அரசியல் பிரச்னை அல்ல என்று கூறிய அவர், வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், சரியான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளும் துணை நிற்போம் என்று குறிப்பிட்டார்.


