News November 23, 2025
NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.
Similar News
News February 6, 2026
இதுவல்லவா இனிய தொடக்கம்!

பிரமாண்ட மேடைகள், ஆயிரக்கணக்கில் விருந்தினர்கள் போன்றவை வேண்டாமென்று முடிவெடுத்த இவர்கள், பணத்தை வீணாக்காமல் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டிலேயே நெருங்கிய நண்பர்களுடன் & உறவினர்களின் முன்னிலையில், எளிமையாக திருமணமும் செய்து கொண்டனர். ‘ஒருநாள் ஷோவுக்காக கடன் வேண்டாம், வாழ்நாள் நிம்மதிதான் முக்கியம்’ என இவர்களின் முடிவு, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாகும். நீங்க என்ன சொல்றீங்க?
News February 6, 2026
394 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Technician Apprentice, Trade Apprentice, Data Entry Operator பதவிகளில் 394 காலி பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 18 – 24 வரை. கல்வித் தகுதி: துறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. சம்பளம்: ₹7,000 – ₹9,000 வரை கிடைக்கும். தேர்வு முறை: Merit List, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. SHARE.
News February 6, 2026
தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் நடந்த கடந்தகால அனுபவங்கள் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை பாதித்துள்ளதாக கூறிய காங்கிரஸ், இதை மனதில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள உள்ள TMC, CPM இண்டியா கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சிகளை எதிர்த்து களம்காண காங்., முடிவு செய்துள்ளது.


