News March 16, 2025
நாதக நாமக்கல் மா.செ. விலகல்

சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாதக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம் நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு சீமான் உறவு கொண்டு வருவதாகவும், தனது சுயலநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், இனி அவருடன் பயணிப்பது தமிழின துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 17, 2025
குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்க ஆணை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News March 17, 2025
ராமர் கோயிலுக்கு ₹400 கோடி வரி

கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ₹400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். GST வரியாக ₹270 கோடியும் பிற வரி வகைகளின் கீழ் ₹130 கோடியும் அரசுக்குச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோயிலுக்கு கூட வரியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 17, 2025
ஒரே அணியில் EPS, OPS, செங்கோட்டையன்

எதிரெதிர் துருவங்களாக திரும்பியிருக்கும் EPS, OPS & செங்கோட்டையன் மூவரும் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக ஒரே அணியில் நின்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் R.B. உதயகுமார் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் செங்கோட்டையனும், ஓ.பன்னீர்செல்வமும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி கண்டது.