News March 19, 2024

புதிய சின்னத்துடன் களமிறங்குகிறது நாதக?

image

மக்களவைத் தேர்தலில் புதிய சின்னத்துடன் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாதக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. எனினும், அதில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் நாதக முடிவை மாற்றியுள்ளது.

Similar News

News September 16, 2025

BREAKING: முடிவை மாற்றிய இபிஎஸ்.. சற்றுமுன் சந்தித்தார்

image

டெல்லி சென்ற இபிஎஸ் திடீர் திருப்பமாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக விவகாரங்களில் டெல்லி தலையிடுவதில்லை என நேற்று அவர் குறிப்பிட்டார். இதனால், செங்கோட்டையன் விவகாரத்தில் அவர் பாஜக தலைவர்களை சந்திக்க மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை சந்தித்து அவர் பேசியுள்ளார். கடந்த வாரம் செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதிமுகவில் அடுத்து என்ன நடக்குமோ?

News September 16, 2025

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு கட்டுபாடு மிகவும் அவசியம். ஆரோக்கியமான கல்லீரல் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. அது என்ன என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. மேலும், தவிர்க்க வேண்டியவை ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 16, 2025

ஆஸ்கர் வென்ற நடிகர் காலமானார்!

image

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்ஃபோர்ட்(89) காலமானார். இவர் ‘Captain America: The Winter Soldier’ படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். ‘ORDINARY PEOPLE’ படத்தை இயக்கிய அவருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நடிகர், இயக்குநர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்ட ராபர்ட் மறைவுக்கு, பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!