News February 9, 2025
நாதக – அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி?

சீமான் பெரியாரை மிக அநாகரிகமாக கொச்சைப்படுத்தியும் அதனை அதிமுக கண்டும் காணாமல் இருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், பாஜகவும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த வெறுப்பு அரசியலை வரவேற்றது என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் மறைமுக கூட்டணி உள்ளதோ என்று திருமா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Similar News
News September 9, 2025
புளியங்குடி புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பு

புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 9, 2025
தொடர் ஏறுமுகத்தில் சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்ந்து 81,051 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 24,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. TCS, Bajaj Finserv, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும், Tata Motors, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. நீங்க வாங்கிய SHARE லாபம் தந்ததா?
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.