News April 8, 2025
தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கும் நாதக வேட்பாளர்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில், நாதக சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர்களை சீமான் தேர்வு செய்துள்ளார். ஆயிரம் விளக்கு- களஞ்சியம், வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக், கீழ்வேலூர்- கார்த்திகா, ஒரத்தநாடு- திருமுருகன், ராமநாதபுரம்- அனீஸ் பாத்திமா, ஸ்ரீரங்கம் – ராஜேஷ், மடத்துக்குளம் – அபிநயா, திருவள்ளூர்- செந்தில்குமார் உள்ளிட்டோர் வேட்பாளராக தேர்வாகி, களத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News November 24, 2025
542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 24, 2025
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்.. வந்தது அலர்ட்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் வருவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


