News May 16, 2024
குழந்தை நட்சத்திரத்தை அறிமுகம் செய்த நாசா

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி பூமியிலிருந்து 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 3 நட்சத்திர அமைப்பை படம் பிடித்துள்ளது. இதில், HP Tau, HP Tau G2, HP Tau G3 ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. HP Tau நட்சத்திரம் மிகவும் பிரகாசமானது. முக்கோண அமைப்பில் மேல் பக்கமாக அமைந்துள்ள சூரியனை போன்ற இந்த நட்சத்திரம், ஒரு கோடி வயதே ஆன குழந்தை என கூறப்படுகிறது. சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
தேங்ஸ் நண்பா… புடினுடன் பேசிய மோடி!

நண்பர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தன் X பதிவில் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் பற்றி தகவல்களை பகிர்ந்ததற்காக, புடினுக்கு நன்றி சொன்ன மோடி, இந்தியா- ரஷ்யாவின் சிறப்புவாய்ந்த உறவையும், நெருக்கத்தையும் மேலும் வளர்க்க உறுதி பூண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் மோதல் வலுக்கும் சூழலில், நம்பகமான கூட்டாளியான ரஷ்யாவுடன் இந்தியா நெருங்குவதையே மோடி-புடின் பேச்சு உணர்த்துகிறது.
News August 8, 2025
எந்த போர்டாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்: அமைச்சர்

CBSE உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 8, 2025
பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு

PM மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் MP கனிமொழி. இது தொடர்பாக தனது X பதிவில், பிரதமரை இன்று நேரில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு மாற்று முனையம் அமைக்க உதவ வேண்டும் என தான் கோரிக்கை வைத்ததாகவும், மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த அளித்த ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.