News June 21, 2024

போதைப்பொருள் – அலுவலர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் கள்ள சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஜூன் 21) கலந்தாய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 8, 2025

குமரி: ஊராட்சியில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., உடனே APPLY

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 09) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 8, 2025

குமரியில் மீனவர்கள் கவலை

image

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக  அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

News November 8, 2025

குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

image

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!