News November 23, 2024
நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பான தனித்துவமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.
Similar News
News October 16, 2025
இன்று உலக உணவு தினம்

1945-ல் ஐநா, உணவு மற்றும் வேளாண் அமைப்பை நிறுவியதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்.16-ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வுலகில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் எல்லோரும் செயல்பட வேண்டும் என்பதை இந்த தினம் உணர்த்துகிறது. அதே நேரத்தில், உணவு வீணாவதை தடுக்க ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையை நாம் தேர்ந்தெடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
News October 16, 2025
2027 உலகக் கோப்பையில் விராட்: தினேஷ் கார்த்திக்

2027 உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸி.,க்கு எதிரான தொடரில் விராட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லையென்றால், உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம் என்று கூறப்படும் நிலையில் DK இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் அவர் கடுமையாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
News October 16, 2025
மன்னிப்பு கேட்டார் மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். தமிழ்நாட்டை கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியதால் தான் இப்படி பெயர் வைத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தன்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் ‘காளமாடன்’ என்றுதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.