News April 21, 2025

மகன் உடல்நலம் குறித்து அவதூறு.. நெப்போலியன் புகார்

image

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். தனது மகன் தனுஷ், மருமகள் அக்‌ஷயா ஆகியோர் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் உடல்நலம் குறித்து சிலர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 10, 2025

மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

image

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.

News September 10, 2025

அக்டோபரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்

image

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) வரும் அக்டோபரில் மேற்கொள்ள ECI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த மாதத்திற்குள் SIR-க்கான களப்பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிஹாரில் SIR-ன் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடின.

News September 10, 2025

திருமண பந்தத்தில் நுழைந்த 9 ஆண்டு காதல் ❤️

image

பறந்து போ பட நடிகை கிரேஸ் ஆண்டனியின் 9 ஆண்டு கால காதல், திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக்கை அவர் நேற்று திருமணம் செய்து கொண்டார். கணவரின் முகம் தெரியாமல் முதலில் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது, காதல் கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படங்களை கிரேஸ் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!