News May 4, 2024
புதிய படத்தில் ஞானவேலுவுடன் இணையும் நானி

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் சூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். வேட்டையன் படத்துக்கு முன்பு நானியை சந்தித்து அவர் கதை கூறியதாகவும், அது நானிக்கு மிகவும் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல்-நானி கூட்டணியில் புதிய படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.
Similar News
News February 14, 2026
நடிகர் சைமன் மாரடைப்பால் காலமானார்.. குவியும் அஞ்சலி

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ஜோ சைமன்(80) மாரடைப்பால் காலமானார். ஜோ சைமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கன்னட நடிகர், நடிகைகள் பலரும் பெங்களூருவில் உள்ள சைமனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘சாஹச சிம்ஹா’, ‘சிம்ஹா ஜோடி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இவர், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் ஆவார்.
News February 14, 2026
அமித் ஷாவை சந்திக்கும் CM ரங்கசாமி!

காரைக்கால் செல்லும் அமித் ஷாவை புதுச்சேரி CM ரங்கசாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாகவும், மதியம் 2.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக வருகிற<<19120407>> தேர்தலை புறக்கணிக்க போவதாக ரங்கசாமி<<>> அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
News February 14, 2026
TTV-க்கும், EPS-க்கும் இடையே இன்னுமா பிரச்னை?

என்னதான் பழைய பகையை மறந்து பங்காளி ஆகிவிட்டோம் என கூறினாலும், TTV & EPS இடையே இன்னும் பிரச்னை இருப்பதாக பேசப்படுகிறது. காரணம், EPS நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவிடுத்தும் அமமுக நிர்வாகிகள் கலந்துகொள்வதில்லையாம். இதை விசாரித்தபோது, EPS நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அமமுகவினரே சொல்கின்றனர். இதன்மூலம் TTV-EPS இடையே இருக்கும் பிரச்னை இன்னும் தீரவில்லை என்கின்றனர்.


