News June 28, 2024
எண்ணிய காரியங்கள் ஈடேற்றும் நந்தீஸ்வரர்

இந்தியாவின் 2ஆவது பெரிய நந்தி சிலை அமைந்துள்ள திருத்தலம் பெங்களூரு தொட்ட பசவண குடி கோயிலாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று சைவ சமயத்தின் முதல் குருவாக கருதப்படும் நந்தீஸ்வரருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சாற்றி, அவல் பால் அன்னம் படைத்து, நந்து ஸ்துதி பாடி, 16 தீபமேற்றி, நிலக் கடலை காணிக்கை செலுத்தி வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம்.
Similar News
News November 19, 2025
FLASH: சபரிமலை தரிசன முன்பதிவு மையம் மாற்றம்

பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் உடனடி தரிசன டிக்கெட் பதிவு மையமானது நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நேற்று நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது. காத்திருப்பு நேரம் 15 மணி நேரத்தை கடந்துள்ளது. மலையேற்றத்தின் போது <<18325487>>மூதாட்டி ஒருவர்<<>> உயிரிழந்தார். இதனால், முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இனி, நிலக்கல்லில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று(நவ.19) தடாலடியாக உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
News November 19, 2025
பள்ளி செல்லும்போது மாணவி கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

பள்ளிக்கு செல்லும் வழியில் +2 மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவியை மறித்த சேராங்கோட்டையை சேர்ந்த இளைஞர் முனியராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.


