News August 25, 2024
காற்று வீசும் திசை&வேகத்திற்கு ஏற்ப வைத்துள்ள பெயர்கள்

*தெற்கிலிருந்து வீசுவது ‘தென்றல்காற்று’
*வடக்கிலிருந்து வீசுவது ‘வாடைக் காற்று’
*கிழக்கிலிருந்து வீசுவது ‘கொண்டல் காற்று’
*மேற்கிலிருந்து வீசுவது ‘மேலைக் காற்று’
*6 KM வேகத்தில் வீசினால் ‘மென்காற்று’
*6-11 KM – இளந்தென்றல் *12-19 KM – தென்றல்
*20-29 KM-புழுதிக்காற்று *30-39 KM-ஆடிக்காற்று
*100 KM – கடுங்காற்று *101-120 KM – புயற்காற்று
*120 KMக்கு மேல் வீசினால் சூறாவளிக் காற்று.
Similar News
News December 17, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று (டிச.17) கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 17, 2025
2026-ல் எந்தெந்த தொகுதிகள்.. பாஜக முக்கிய முடிவு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது. இக்கூட்டத்தில், பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவது, வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்துவது உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
News December 17, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.20 உயர்ந்து, $4,312.09-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நேற்று (டிச.16) சவரன் ₹98,800-க்கு விற்பனையானது.


