News April 13, 2025
செல்போனில் எண்ணுக்கு பதில் பெயர்.. நாளை வரை கெடு

அழைப்பின்போது எண்ணுக்கு பதில் செல்போன் திரையில் பெயர் வருவது குறித்த பரிசோதனையை நாளைக்குள் முடித்து, 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது. 2ஜி தவிர்த்து, பிற போன்களில் திரையில் பெயர் வருவது போன்ற வசதியை செய்துதர தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான பரிசோதனை முடிந்ததும் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
Similar News
News April 17, 2025
சின்னத்துரை விவகாரம்.. தனிப்படை அமைத்த போலீஸ்

நெல்லை நாங்குநேரியில் மாணவர் சின்னத்துரையை தாக்கிய விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சின்னத்துரையை அழைத்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத 4 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டு வழிப்பறி செய்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறது.
News April 17, 2025
நடிகை மிஷேல் திடீர் மரணம்: மர்மத்தை நீக்கிய ரிப்போர்ட்

பிரபல ஹாலிவுட் நடிகை <<15593985>>மிஷேல் டிராக்டன்பர்க்<<>> (39) மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீரிழிவு நோய் பாதிப்பே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அறிக்கை கூறுகிறது. தனது 3 வயதிலேயே விளம்பரங்களில் நடித்துப் பிரபலமான மிஷேல், 100க்கும் மேற்பட்ட படங்கள், சீரிஸில் நடித்துள்ளார். கடந்த பிப்.26-ம் தேதி நியூயார்க்கில் உள்ள வீட்டில் சடலமாக கிடந்த மர்மம், இன்று வெளியான மருத்துவ அறிக்கையின் மூலம் நீங்கியுள்ளது.
News April 17, 2025
இந்திய அணியின் Asst. கோச் அபிஷேக் நாயர் பதவி நீக்கம்?

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரை BCCI பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. ஆனால், இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. BGT தொடரில், இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. இவருடன் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரும் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.