News November 14, 2024
நல்ல தமிழில் பெயர் வையுங்கள்: உதயநிதி

துணை முதல்வர் உதயநிதி, திமுகவினருக்கு அன்புக் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார். ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்லத் திருமணத்தில் அவர் கலந்துகொண்டார். அங்கு பேசிய அவர், “சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளும் திமுகவினர், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் வையுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News August 26, 2025
மாணவர்களுக்கு தினமும் முருங்கை இலை பொடி தாங்க!

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். வயிறு நிறைய சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தா மாணவர்களுக்கு படிப்பு நல்லா வரும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கான உணவில் தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டுமெனவும் இதன் மூலம் ரத்த சோகையை தடுக்க முடியும் எனவும் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
News August 26, 2025
புதிய மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்ச அரசு!

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
News August 26, 2025
காலை உணவின் தரத்தை உயர்த்துக: நயினார்

போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.