News August 25, 2024
தேமுதிக அலுவலகம் பெயர் மாற்றம்

மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கு என்று புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது என்றும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
Similar News
News July 5, 2025
148 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்..

IND vs ENG மேட்சில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. ENG-ன் பிரைடன் கார்ஸின் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறியது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது டக் அவுட்டாகும். 1877-ல் ENG-க்கு எதிராக ஆஸி.யின் நெட் கிரிகோரி தான் முதன்முதலில் டக் அவுட்டாகி இருந்தார். 148 வருடங்கள், 3 மாதங்கள் & 20 நாள்கள் கழித்து 10,000-வது டக் அவுட் நிகழ்ந்துள்ளது.
News July 5, 2025
விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News July 5, 2025
தனிமையில் வாட வேண்டாமே…

போன் நோண்டவே டைம் பத்தாத இன்றைய இளம் ஜெனரேஷன், தனிமையில் தான் வாடுகின்றது. நேரடி பந்தபாசம் கிடைக்காமல் தனிமையில் தவிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 100 பேர் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் டைம் ஒதுக்கி நண்பர்களுடன் நேரில் சென்று பேசி சிரித்து மகிழுங்கள். வீட்டிலும் அன்பு பாராட்டுங்கள். ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்விடும். இதற்கு முதலில் போனை கொஞ்ச நேரம் தூரம் வையுங்க!