News March 17, 2024
நாமக்கல் மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
நாமக்கல்: ரூ.23.51 லட்சத்துக்கு காய்கறி பழங்கள் விற்பனை

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விடுமுறை தினத்தை யொட்டி நேற்று காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 44 டன் காய்கறிகள் மற்றும் 11 டன் பழங்கள் என மொத்தம் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 570-க்கு விற்பனை செய்யப்பட்டன.
News November 24, 2025
கந்தம்பாளையத்தில் பரபரப்பு! தாய் திட்டியதால் நடந்த விபரீதம்

கந்தம்பாளையம் அருகே கரிச்சிபாளையத்தை சேர்ந்த பவதாரணி(18), வேலூர் தனியார் கல்லூரி மாணவி. விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, வேலை செய்யவில்லை என்று தாய் சரோஜா கண்டித்ததாக தெரிகிறது. மனமுடைந்த பவதாரணி 3-ந்தேதி காலை மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயத்துடன் திருச்செங்கோடு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 24, 2025
நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா?

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் <


