News March 16, 2024
நாமக்கல்: யோகாவில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் மாணவிகள்

சேலம் – பெரியார் பல்கலைக் கழக அளவிலான யோகாப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் அணிக்கு கல்லூரியின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. யோகா வீராங்கனைகள் வீ. கார்த்திகா, வீ. கீர்த்தனா ஶ்ரீ, எம். மதுமிதா, ஏ. லீலாவதி, ஆர். கௌசல்யா மற்றும் ஆர் லாவண்யா ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.
Similar News
News August 28, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.27) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.89-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News August 28, 2025
நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. எனவே வரும் 4 நாட்களில் காற்று மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 12 முதல் 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஆக.28) 3 மி.மீ, நாளை(ஆக.29) 3 மி.மீ, வருகிற 30ஆம் தேதி, 6 மி.மீ, 31ஆம் தேதி 1 மி.மீ எனும் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
News August 28, 2025
நாமக்கல் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!