News March 17, 2024
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிக்கை

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் ஏற்கனவே தங்கள் சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று வைத்துள்ள அனைத்துவிதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியர் அறிக்கை இன்று வெளியிட்டார்.
Similar News
News January 18, 2026
நாமக்கல்லில் இன்று ஜல்லிக்கட்டு!

எருமப்பட்டி கைகாட்டியில், இன்று காலை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். இதில் காளைகள் பங்கேற்க, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. போட்டியில் 600 காளைகளுக்கு, ‘டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாடுபிடி வீரர்கள், 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி., விமலா தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News January 18, 2026
நாமக்கல்லில் அதிரடி: 12 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பெட்டிக்கடைகள் மற்றும் சந்து பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 594 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News January 18, 2026
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


