News March 17, 2024
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
நாமக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அண்ணா வெள்ளிவாரச்சந்தை சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் சத்திநாயக்கன்பாளையம், மற்றும் கபிலர்மலை வட்டாரம் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 24, 2025
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்!

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்கம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
News September 24, 2025
நாமக்கல்லில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி!

நாமக்கல் மாவட்டத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நாளை செப்டம்பர்-25ந் தேதி வியாழக்கிழமை அனைத்து அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளில் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி செயல்பாட்டாளா்களுக்கு, பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.