News April 19, 2024
நாம் தமிழர் வேட்பாளர் கைது

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது சின்னமான ஒலி வாங்கிக்கு அருகில் இருக்கும் விளக்கு எரியவில்லை என்ற புகாரினால் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அத்தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News May 7, 2025
IPL: ராஜஸ்தான் பௌலிங்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்துக்கு சென்றுவிடும். அதேநேரம் அடுத்த சுற்று வாய்ப்பை 99% இழந்த ராஜஸ்தான் அணி 4-வது வெற்றிக்கு நிச்சயம் போராடும். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட போது 15 முறை மும்பையும், 14 முறை ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
News May 7, 2025
போர் பதற்றம்: பாகிஸ்தான் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

இந்தியாவுடன் நிலவும் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எந்நேரமும் தாக்கலாம் என்ற பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதனால் பாகிஸ்தான் பங்குச்சந்தை நேற்று ஒரே நாளில் 3,545 புள்ளிகள் வீழ்ச்சியை கண்டன. இது 3.06% சரிவு ஆகும். இதனால் பாகிஸ்தானின் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
News May 7, 2025
நடிகர் அடித்து கொலை? போலீஸ் விசாரணை தீவிரம்

பேமிலி மேன் 3 சீரிஸ் நடிகர் <<16257252>>ரோஹித்<<>> மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தலை, முகம், உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள குடும்பத்தினர், பார்க்கிங் தொடர்பான தகராறில் அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும், ஆதலால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து கொலை கோணத்திலும் போலீஸ் விசாரிக்கிறது.