News June 25, 2024
கல்லூரியில் “நல்லோசை” பள்ளிகளில் “கற்றல் இனிதே”

கல்லூரியில் “நல்லோசை” பள்ளிகளில் “கற்றல் இனிதே” என்ற திட்டம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் பள்ளி/கல்லூரி நேரத்திற்கு பிறகு மாணவ, மாணவிகள், கலை, அறிவியல், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், மென் மற்றும் பணி திறன்களில் முழுமையான திறனை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில், திறன் சார்ந்த பட்டறைகள், போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
Similar News
News November 14, 2025
BREAKING: தேஜஸ்வி யாதவ் வெற்றி

பிஹார் தேர்தலில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேஜஸ்வி யாதவும், BJP-ன் சதீஷ் குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இழுபறி நீடித்த நிலையில், தற்போது 11,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.


