News April 16, 2025

சீமானை கூட்டணிக்கு அழைத்தார் நயினார்

image

நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய கதைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக சீமான் இதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை சீமான் ஏற்பாரா!

Similar News

News December 1, 2025

புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

image

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.

News December 1, 2025

பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

image

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News December 1, 2025

இன்று சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

image

நடிகை சமந்தாவுக்கு இன்று 2-வது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் ராஜ் நிடிமொருவை அவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராஜின் மனைவி, ‘Desperate people does desperate things’ என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!