News March 19, 2025
நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
Similar News
News September 20, 2025
விஜய் சொல்லும் புது கணக்கு

நாகையில் பேசிய விஜய், தான் பேசுவதற்கு பல தடைகளை திமுக அரசு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். அப்போது அவர், 5 நிமிடம் தான் பேச வேண்டும், 10 நிமிடம் தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு. நான் பேசுவதே 3 நிமிடம் தான் என்று சொன்னார். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள், பேசுவதே 3 நிமிடம் தான் எனில், எதற்காக விஜய் இதை குறையாக சொல்கிறார் என்று கேட்கின்றனர். நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க.
News September 20, 2025
ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தொடர்கிறது

உடல்நலக் குறைவால் உயிரிழந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அவரது பேரனுக்கு இன்று மதுரையில் காதணி விழா நடக்க இருந்ததுதான். தடபுடலாய் இன்று நடந்திருக்க வேண்டிய விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தற்போது வரை தொடர்கிறது. SO SAD.
News September 20, 2025
H1B விசா: இருமடங்கு அதிகரித்த விமான கட்டணம்

H1B விசா கட்டண உயர்வு நாளை அமலாகும் நிலையில், அதை விமான நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளன. வழக்கமாக டெல்லியில் இருந்து US செல்ல விமான கட்டணம் ₹37,000 வசூலிக்கப்படும். இது தற்போது 2 மடங்கு அதிகரித்து ₹80,000 ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட 2 மணி நேரத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் துர்கா பூஜை கொண்டாட, இந்தியா வந்த பலரும் அவசரமாக US புறப்பட்டுள்ளனர்.