News April 11, 2025
கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன்!

தமிழக பாஜக தலைவருக்கான விருப்பமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், தி.நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன் சென்றார். அப்போது வாசற்படியை தொட்டு வணங்கியபடி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தவரை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பிற்பகல் 2 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் கமலாலயத்திற்கு படையெடுத்தனர்.
Similar News
News April 18, 2025
10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. இதேபோல், பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News April 18, 2025
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் RCB

PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
News April 18, 2025
வரலாறு படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.