News April 21, 2024
ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நாகார்ஜூனா?

‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்171’ படத்தில், அவருக்கு வில்லனாக நடிகர் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை மேலும் சரிவு!

சர்வதேச சந்தையில் 2 மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், ஏறிய வேகத்தில் தற்போது குறைந்து வருகிறது. காலையில் $4,800-க்கு விற்பனையான 1 அவுன்ஸ்(28g) தங்கம் தற்போது $400 டாலர்களுக்கு மேல்(8%) குறைந்துள்ளது. வெள்ளி விலையும் 12% சரிந்து 1 அவுன்ஸ் $74-க்கு விற்பனையாகிறது. இதனால், மாலை நேரச் சந்தையிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. விலை சரிவை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. SHARE IT.
News February 2, 2026
கருத்து கணிப்பா? கடுப்புல விட்ட கணிப்பா? விஜய்

தற்போது வரும் கருத்து கணிப்புகளில் சில கணிப்புகள் கடுப்பில் விட்ட கணிப்பாக இருக்கிறது என விஜய் கிண்டலடித்துள்ளார். கருத்து கணிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு வீடாக சென்றால் அனைத்து வீடுகளிலும் தவெகவுக்கு ஆதரவு இருக்கும் என்ற அவர், அது அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வைத்து அழித்து மீண்டும் கருத்து கணிப்பை நடத்தி பார்க்கும்படி கூறியுள்ளார். அத்துடன், உண்மையான கணிப்புகளை மதிப்பதாகவும் பேசியுள்ளார்.
News February 2, 2026
சுற்றுலா மாநாட்டில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

மாமல்லபுரத்தில் 2 நாள்கள் நடைபெறும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரின் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாடு பல்வேறு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


