News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். நாமக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
மோகனூர் அருகே மொபட் மோதி வியாபாரி பலி!

மணப்பள்ளியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி தண்டபாணி (50), வேலூரில் வெற்றிலை விற்றுவிட்டு அக்.6-ம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது, மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் சாலையின் அருகில் பின்னால் வந்த மொபட் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். நாமக்கல், கோவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 28, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 28, 2025
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.11 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.11 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக குறைந்து உள்ளது. முட்டை விலை உயர்வைத் தொடர்ந்து, முட்டை கோழி விலையும் உயர்வடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


