News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
ஈரோட்டில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஈரோடு மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 8675412356 எண்ணை அணுகவும். பதிவு செய்ய <
News September 18, 2025
ஈரோடு: பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு: கனகபுரம் கொமராபாளையத்தை சேர்ந்த குமாரின் மனைவி பாப்பாத்தி (54). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அறச்சலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 18, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று செப்டம்பர் 18 அன்று பவானி கோபி நம்பியூர் பெருந்துறை தாளவாடி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.