News February 10, 2025

நடிகை கஸ்தூரி போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்

image

தனது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. அதனால், வேறு டிவைஸில் இருந்து இந்த தகவலை பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு சோஷியல் மீடியாவில் பலரும் ஆதரவாகவும், கிண்டல் செய்தும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Similar News

News February 11, 2025

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

image

TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

News February 11, 2025

டெல்லியில் கிரிமினல் வழக்கு உள்ள MLAக்கள் குறைவு

image

டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் 31 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம், ஒருவர் மீது கொலை முயற்சியும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான வழக்கும் உள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ளதாக அறிவித்த 43 MLAக்களை விட குறைவாகும்.

News February 11, 2025

நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

image

வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.

error: Content is protected !!