News February 24, 2025

வெற்றி மாறனுக்காக ₹25 லட்சம் கடன் வாங்கிய மிஷ்கின்

image

மிஷ்கின் குறித்த ஒரு சம்பவத்தை சமுத்திரகனி பகிர்ந்துள்ளார். ‘விசாரணை’ படத்தை ரிலீசுக்கு முன்னர் பார்த்த போது, அப்படம் மிஷ்கினுக்கு பிடித்து விட்டதாம். அதையடுத்து இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பலரை அழைத்து, ஒரு ஹாலில் அந்த படத்தை போட்டுக்காட்டி, இந்த படம் பற்றி அதிகம் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். இந்த நிகழ்வை நடத்துவதற்கு அவரிடம் பணம் இல்லாததால், ₹25 லட்சம் கடன் வாங்கினாராம்.

Similar News

News February 25, 2025

அங்கீகாரம் இல்லாத 6,000 பிளே ஸ்கூல்கள்

image

மாநிலம் முழுவதும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட பிளே ஸ்கூல்கள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாதுகாப்பின்றி மாடி கட்டடம், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், விளையாட இடம் இல்லாதது உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் இந்த ஸ்கூல்கள் இயங்குகின்றன. ஆபத்தை உணராமல் வேலைக்கு செல்லும் பெற்றோர், குழந்தைகளை இங்கு சேர்க்கின்றனர். இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

News February 24, 2025

ராசி பலன்கள் (25.02.2025)

image

மேஷம் – முயற்சி, ரிஷபம் – புகழ், மிதுனம் – ஆசை, கடகம் – நேர்மை, சிம்மம் – செய்தி, கன்னி – நன்மை, துலாம் – உயர்வு, விருச்சிகம் – லாபம், தனுசு – செலவு, மகரம் – வெற்றி, கும்பம் – தாமதம், மீனம் – உழைப்பு.

News February 24, 2025

SEMI – FINAL-லில் இந்தியா

image

ICC Champions Trophy தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ரோகித் தலைமையிலான இந்தியா படை முன்னேறியது. இன்று நடந்த போட்டியில் வங்கதேசத்தை நியூசி., வீழ்த்தியது. இதனால், அந்த அணியும், ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் மிரட்டி வரும் இந்தியா, இந்த முறை கோப்பையை தட்டித் தூக்கும் முனைப்பில் இருக்கிறது.

error: Content is protected !!