News March 29, 2025
மீளாத துயரில் ஆழ்ந்த மியான்மர்.. 1000 பேர் மாயம்

மியான்மரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த பூகம்பம் அந்நாட்டு மக்களை உலுக்கியது. சீட்டு கட்டுகளைப் போல் சரிந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் நய்பிடாவ், மாண்டலே, டாங்கூ நகரங்களில் எங்குப் பார்த்தாலும் கட்டடக் குவியலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 31, 2025
அமைதிக்கான நோபல் பரிசு ரேஸில் இம்ரான் கான்…!

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு அந்நாட்டின் Ex PM இம்ரான் கானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வேயில் உள்ள பார்டியட் சென்ட்ரம் என்ற கட்சியுடன் தொடர்புடைய பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் அவரது பெயரை பரிந்துரைத்துள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான், 2019-லும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
News March 31, 2025
இரவு சாப்பாட்டை எப்போது சாப்பிட வேண்டும்?

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சிலர் இரவு சாப்பாட்டை 11 மணிக்கு சாப்பிடுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சூரியன் மறைந்தவுடன் நமது உடலில் மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் சுரக்கும் என்றும் அது அதிகம் சுரப்பதற்குள் உணவருந்திவிடுவது நல்லது என்றும் கூறுகின்றனர். தாமதமாக சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும்.
News March 31, 2025
நாய்க்கடிக்கு சிறுவன் பலி

சேலத்தில் தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதனை அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார். திடீரென நேற்று சிறுவனின் உடல்நலன் குன்றவே, பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.