News August 17, 2024
என் மல்யுத்தம் ஓயவே ஓயாது: கர்ஜித்த வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். டெல்லியில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரிடம், மல்யுத்தத்தை தொடர்வீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “எனது போராட்ட குணம் ஓயும் வரை, என் மல்யுத்தமும் ஓயாது” என பதிலளித்தார்.
Similar News
News November 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 524
▶குறள்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
▶பொருள்: தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
News November 19, 2025
அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள்

சில புத்தகங்கள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. அவை விற்பனையையும் கடந்து உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. அவை எந்தெந்த புத்தகங்கள், எவ்வளவு விற்பனையாகி உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


