News April 10, 2024
திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு: இயக்குநர் ரவிகுமார் அறிவிப்பு

அயலான் பட இயக்குநர் ரவிகுமார், “திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கே எனது வாக்கு” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இதுபோன்று வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஐஎம் வேட்பாளர்களான சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதரவை அவர் அளித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!
News July 9, 2025
நமீபியா புறப்பட்டார் PM மோடி

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
News July 9, 2025
Bharat Bandh: TN-ல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.