News August 9, 2024
My V3 Ads செயலி தற்காலிகமாக முடக்கம்

My V3 Ads செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக, கைது செய்யப்பட்ட My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் கூறியிருந்த நிலையில், செயலி முடக்கப்பட்டுள்ளது. விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, மோசடி செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2025
கவர்னரின் அடாவடி: CM ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து INDIA கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், SIR மூலம் வாக்குரிமையை பறித்தும், Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைத்தும், மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு விதிக்க முடியாது: SC

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என SC அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. TN அரசின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது எனவும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News November 20, 2025
சற்றுமுன்: விஜய்க்கு பெரும் அதிர்ச்சி

டிச.4-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அன்றைய நாளில் தி.மலை தீபம் நடைபெறவுள்ளதால் பரப்புரைக்கு அனுமதி தர இயலாது என கூறப்பட்டுள்ளது. டிச.6 (சனிக்கிழமை) அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக, செப்.27-ல் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். விஜய் பரப்புரைக்கான இடர்கள் அகலுமா?


