News October 18, 2025

‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி கூட்டம்

image

அக்.28-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு தமிழ்நாடு தலைகுனியாது. மேலும், 2026 தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News March 20, 2026

WhatsApp-ல் வரும் புது அப்டேட்..

image

WhatsApp தனது யூஸர்களுக்கு தெளிவான Calling அனுபவத்தை தர புதிய Noise Cancellation வசதியை கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Advanced Audio Processing டெக்னாலஜி மூலம், நெரிசலான இடங்களில் இருந்து நீங்கள் பேசினாலும், உங்களின் குரல் மட்டும் மறுமுனையில் இருப்பவருக்கு கேட்குமாம். உங்கள் குரலை தவிர்த்து, வாகனங்களின் சத்தம், காற்றின் இரைச்சல், மற்றவர்கள் பேசும் சத்தம் போன்றவை தானாக நீக்கப்படுமாம்.

News March 20, 2026

திமுக ஒரு மனிதகுல விரோதி: சீமான்

image

தன் முதுகிலேயே ஸ்டாலின் ஒரு டெல்லியை (காங்.,) வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என சீமான் சாடியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், GST, NEET உள்ளிட்ட காங்., பிரசவித்த பிரச்னைகளுக்கு மோடி பூஸ்ட் கொடுத்து வளர்க்கிறார் என்று விமர்சித்துள்ளார். எனவே பாஜகவை விமர்சிப்பதற்காக காங்.,ஐ திமுக புனிதப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், காங்., தமிழின விரோதி என்றால் திமுக மனிதகுல விரோதி என குறிப்பிட்டார்.

News March 20, 2026

தேர்தல் பறக்கும் படை உங்கள் பணத்தை பறிமுதல் செய்தால்..

image

நீங்கள் நேர்மையாக கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால் பயப்பட வேண்டாம். அந்த பணத்திற்குரிய வங்கி ரசீது, வீட்டு நிகழ்வுகளுக்கான பணம் என்றால், தேவையான ஆதாரத்துடன் விளக்கம், பள்ளி, கல்லூரி கட்டணம் என்றால் அதற்கான தகவல்களை அளித்து திரும்ப பெறலாம். உதாரணமாக, நகை (அ) பிற பொருள்கள் வாங்க ₹50,000-க்கு மேல் கொண்டு சென்றால் அதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.

error: Content is protected !!