News March 29, 2024

என்னை நினைத்து என் தாய் பெருமைப்படுவார்

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தனது தாயை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். என் அம்மா இங்கே இருக்கிறார். கடந்த 3-4 ஆண்டுகளாக என் தடுமாற்றங்களைப் பார்த்தவர் அவர். நிச்சயம் இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார் என்று தெரிவித்தார்.

Similar News

News March 27, 2026

BREAKING தஞ்சை மாவட்ட புதிய SP நியமனம்!

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தஞ்சை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக E. சுந்தரவதனம் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 27, 2026

Shrey ஹெல்மெட்டின் வரலாறு தெரியுமா?

image

கிரிக்கெட் ரசிகர்கள் Shrey என்ற பிராண்டின் பெயரை கிரிக்கெட் ஹெல்மெட்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விளையாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்கு பெயர்போன கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இதன் உரிமையாளர் ராகவ் கோலியின் சகோதரர் (Shrey kohli) கார் விபத்தில் உயிரிழக்க அவரின் நினைவாக Shrey பிராண்ட் உருவாக்கப்பட்டது. இன்று பல வீரர்களின் உயிர் கவசமாக Shrey மாறியுள்ளது.

News March 27, 2026

தலைமுடி அடர்த்தியா வளர சீக்ரெட் எண்ணெய்

image

முடி அதிகமாக உதிர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகுறீங்களா? இந்த எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க. ➤ஆலிவ் ஆயிலை சூடாக்கி, ரோஸ்மேரி, கருஞ்சீரகம், வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் ➤10 நிமிடங்கள் வரை அடுப்பில் வையுங்கள் ➤சூடு இறங்கியதும் எண்ணெயை வடிகட்டி ஜாடியில் வைத்துக்கொள்ளுங்கள் ➤வாரத்துக்கு 2 – 3 முறை Scalp-ல் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வர முடி அடர்த்தியாக வளரும். SHARE.

error: Content is protected !!