News July 19, 2024
என் உயிருக்கு ஆபத்து: ஜான்பாண்டியன்

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் இன்று (ஜூலை.19) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருமாவளவன், கிருஷ்ணா சாமி, சீமான் போன்ற தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, திமுக வந்தது அதை திரும்பபெற்றது. மேலும் தனக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.
Similar News
News September 13, 2025
நெல்லை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
நெல்லை – தாம்பரம் ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

நெல்லை வழியாக சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் வருகிற 17ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8:20 மணிக்கு புறப்படும். அந்த ரயில் மறு மார்க்கத்தில் 18ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளது.
News September 13, 2025
நெல்லை: அரசு வேலை பணமோசடி – தம்பதி மீது வழக்கு

பாளையங்கெட்டிகுளம் காமராஜ் நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காட்டாங்குளியை சேர்ந்த காந்திராஜ் அவரது மனைவி உஷா ராணியிடம் 2 லட்சம் அளித்தார். அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதுக்குறித்து அந்தோணி ராஜ் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் காந்திராஜ், உஷாராணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.