News September 5, 2025
எனது வாழ்க்கை சலிப்பானது: அனுஷ்கா

பாகுபலிக்கு பிறகு தனது கதை தேர்வில் மிகவும் கவனமுடன் இருப்பதாக அனுஷ்கா கூறியுள்ளார். அவரது நடிப்பில் ‘காதி’ படம் இன்று ரிலீஸாகிறது. இதனையொட்டி அவர் அளித்த பேட்டியில், ஆரம்பம் முதலே தான் நடித்த படங்களின் ரிலீஸுக்கு முன்பும் பின்பும் பயமாக இருக்கும் என்ற அவர், அது இப்போதும் தனக்கு உண்டு என்றார். தனது வாழ்க்கை மிகவும் சலிப்பானது என்று சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாததற்கு விளக்கம் அளித்தார்.
Similar News
News March 26, 2026
இன்று மறந்தும் இவற்றை செஞ்சிடாதீங்க..

ராமப்பிரானின் பிறந்த நாளான இன்று மறந்தும் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது *வெங்காயம், பூண்டு, இறைச்சியை தவிர்க்கவும் *இன்றைய தினம் தலைமுடியை வெட்டுவதையோ அல்லது சவரம் செய்வதையோ தவிர்க்கவும் *ராம நவமி அன்று மற்றவர்களை விமர்சிக்கவோ, தவறாக பேசவோ கூடாது. மனதில் ராம நாமத்தை நிலைநிறுத்துங்கள் *உங்கள் துணையை எந்த ஒரு காரியத்திற்கும் ஏமாற்றாதீர்கள். SHARE IT.
News March 26, 2026
FLASH: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கைது பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் அட்டூழியம் நடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 26, 2026
நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


