News May 14, 2024

இன்று முதல் “என் கல்லூரி கனவு” திட்டம் தொடக்கம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

Similar News

News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பயப்படாதீங்க: பிரேமலதா

image

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னையை திறம்பட கையாள முடியும் என PM மோடி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையின்றி பதட்டம் அடைய வேண்டாம் என தெரிவித்தார். அதுபோல, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News March 13, 2026

பாகிஸ்தான் அணிக்கு கொலை மிரட்டல்!

image

வங்கதேசத்துடனான முதல் ODI-யில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் Ex வீரர் பாசித் அலி, வங்கதேசத்துடனான போட்டிக்கு உத்தி வகுத்த நபரை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 13, மாசி 29 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!