News August 21, 2025
Post Man மூலம் Mutual Fund திட்டம்.. விரைவில் அமல்

தபால்காரர்கள் மூலம் பொதுமக்களை மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ‘மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்’ என அழைக்கப்படுவர்.
Similar News
News January 15, 2026
4 கணவர்களை வச்சிக்கலாம் என தேர்தல் வாக்குறுதி!

தாய்லாந்து PM வேட்பாளர் மோங்கோல்கிட் சுக்சிந்தரனோன், ஒரு விநோதமான தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளார். அதன்படி, தனது ஆட்சியில் தாய்லாந்து பெண்கள் 4 கணவர்கள் வரை கொண்டிருக்கலாம் எனவும், முக்கியமாக, அது 4 பேரின் பரஸ்பர சம்மதத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை பேணவே இத்தகைய வாக்குறுதியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News January 15, 2026
குழந்தைகள் ஓயாம Shorts பார்த்தா இதை பண்ணுங்க!

உங்கள் குழந்தைகள் எந்நேரமும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் பார்க்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்காகவே யூடியூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குள் இருப்பவர்கள் எவ்வளவு நேரம் ஷார்ட்ஸ் பார்க்கலாம் என பெற்றோர்கள் டைம்லிமிட் செட் செய்து கொள்ளலாம். தற்போது 15 நிமிடங்கள் – 2 மணி நேரம் வரை டைம்லிமிட் வசதி உள்ள நிலையில், விரைவில் பூஜ்ஜிய நேரத்திற்கான செட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
News January 15, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 581 ▶குறள்: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ▶பொருள்: நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.


