News April 16, 2024
கோவையில் மட்டன் பிரியாணி உறுதி

கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி என அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ஆளுமைகள் நடந்து சென்றாலே சிங்கம் போன்றுதான் இருப்பார்கள், குரங்குகள் தான் குட்டிக்கரணம் போட்டு பொதுமக்களிடம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
Similar News
News December 19, 2025
SPORTS 360°: இங்கிலாந்தை திணற வைத்த ஆஸி.,

*உலக டூர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி இந்தோனேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.*3-வது ஆஷஸ் ஆஸி., முதல் இன்னிங்சில் 371 ஆல் அவுட்டானது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கி., அணி 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. * U 19 ஆசிய கோப்பை போட்டியில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன. *வெ.இண்டீசுக்கு எதிரா டெஸ்டில் நியூசிலாந்து 334 ரன்கள் குவித்துள்ளது.
News December 19, 2025
தவெக பால்வாடி கட்சி: அமைச்சர் சேகர்பாபு

ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் வழக்கம் போல் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். பால்வாடி கட்சிக்கு பவளவிழா கட்சி பதில் சொல்வது நன்றாக இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கு ஊர் சென்று கூட்டம் நடத்தும் கட்சி தவெக என்றும், ஆனால் ஊர் முழுவதும் கூட்டம் நடத்தும் கட்சி திமுக எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 19, 2025
வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை சரிபார்ப்பது எப்படி?

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை ECI வெளியிட உள்ளது. இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை நீங்கள் ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். ECI இணையதளமான <


