News April 16, 2024
CSK-வில் இருந்து முஸ்தஃபிசூர் விலகல்

CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி, மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 14, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. சலுகை அறிவித்தது தமிழக அரசு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
விஜயகாந்த் பாணியா? பவன் கல்யாண் பாணியா?

2026 பேரவைத் தேர்தலை கூட்டணியில் இணைந்து சந்திக்க தவெக தயாராகிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில், 2011 தேர்தலில் ADMK கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது. விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்தார். ஆந்திராவில், NDA கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். ஒருவேளை NDA கூட்டணியில் இணைந்தால் விஜய் எதை தேர்வு செய்வார்?
News March 14, 2026
திடீரென உருவாகும் கட்சிகள் இப்படித்தான் மாறும்: TTV

திடீரென உருவாகும் கட்சிகள் காலப்போக்கில் செல்லாக்காசாகி விடும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். அமமுகவின் 9-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமக்காக மட்டுமே வாழும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பி தூர வீசிவிடுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டது சசிகலாவையா (அ) விஜய்யையா என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்கள் கருத்து?


