News May 26, 2024
6 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தஃபிசுர்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் USA வெற்றிபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் வ.தேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் சிறப்பாக பந்துவீசிய வ.தேச அணி வீரர் முஸ்தஃபிசுர் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Similar News
News March 7, 2026
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது: மத்திய அரசு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும், போதுமான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என்றும் உறுதியாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு: H.ராஜா

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர், குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறுவதாக H.ராஜா விமர்சித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு என்றும் விமர்சித்துள்ள அவர், மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதாக சாடியுள்ளார். யாரை சொல்கிறார்?
News March 7, 2026
கச்சா எண்ணெய் விவகாரம்.. US-க்கு இந்தியா கொடுத்த பதில்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் காலக்கெடுவை நிராகரித்த இந்தியா, அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், தேசத்தின் நலனே முக்கியம் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.


