News April 18, 2025
பல பெண்களுடன் மஸ்க் ரகசிய டீலிங்?

ஏற்கனவே 14 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க், பல பெண்களை X மூலம் தொடர்பு கொண்டு ரகசியமாக குழந்தைகளை பெற முயற்சிப்பதாக Wall Street Journal ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற, பல பெண்களுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் அவர் இப்படி செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை வதந்தி என மஸ்க் மறுத்துள்ளார்.
Similar News
News December 3, 2025
இன்று திருப்பத்தூர் இரவு ரோந்து பணிகள்

இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்திப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ரோந்து குழுக்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டு, அவசர நேரங்களில் உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
ஹீமோகுளோபின் குறைவாக இருக்கா.. இதை சாப்பிடுங்க

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இதன் அளவு மிகக் குறைவாக இருந்தால், நுரையீரலில் இருந்து திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் பெறாமல் போகலாம். இதனால் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு PHOTOS

தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 5 புதிய பொருட்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தமிழகத்தின் பெருமையை SHARE பண்ணுங்க.


