News March 30, 2025

DOGEலிருந்து வெளியேறும் மஸ்க்?

image

அமெரிக்க அரசின் வீண் செலவினங்களை, 130 நாள்களுக்குள், நாளொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்க செயல்திட்டம் தீட்டி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்மூலம், USA அரசு பொறுப்பில் (DOGE) இருந்து வரும் மே மாதம் எலான் மஸ்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை நீக்குவது உள்பட அவரது செயல்பாட்டிற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 1, 2025

ஜிப்லியால் CHAT GPTக்கு குவிந்த பயனாளர்கள்

image

போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு ஜிப்லி புகைப்படங்களால் நிறைந்துள்ளது சமூக வலைதளங்கள். இதனால் OPEN AI நிறுவனத்தின் CHAT GPT-யில் ஜிப்லி அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களில் மட்டும் 10 லட்சம் புதிய பயனாளர்கள் அதில் இணைந்துள்ளதாக CEO சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார். ஜப்பான் கார்டூனை வைத்து உருவாக்கப்பட்ட ஜிப்லியை, அனைத்து தர மக்களும் தங்களுக்கு ஏற்றார் போல் உருவாக்கி ரசித்து வருகின்றனர்.

News April 1, 2025

தவெகவில் இணைந்த AAP மாநில நிர்வாகி தேவகுமார்

image

ஆம் ஆத்மியின் மாநில ஐடி விங் மாநிலச் செயலாளர் டாக்டர் தேவகுமார் தவெகவில் இணைந்தார். கடலூர் மண்டலத் தலைவராகவும் இருந்த தேவகுமார், விஜய்யின் தீவிர ரசிகராவார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அவர், நெய்வேலியில் உள்ள தனது ஹாஸ்பிடலில் தவெகவினருக்கு மருத்துவ செலவில் 25% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதோடு, கடலூரில் கட்சி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News April 1, 2025

வெயில் காலத்தில் பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா?

image

வெயில் காலத்தில் <<15954126>>பீர் <<>>குடிப்பதால், உடலுக்கு குளிர்ச்சி, உடல் சூட்டை தணிக்கலாம் என மதுபிரியர்களிடம் தவறான புரிதல் நிலவுகிறது. வெயில் காலங்களில் பீர் குடித்தால் ரத்தக்குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிக அளவில் வெளியேறும் என்றும் போதையால் தாகம் இருந்தாலும் தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே ஜில் பீர் மட்டுமின்றி மதுபானங்களை தவிர்ப்பதே நல்லது.

error: Content is protected !!