News October 2, 2025
NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்த மஸ்க்.. ஏன்?

இயக்குநர் ஹமீஷ் ஸ்டீலை பணியமர்த்தியதால், NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை ஆதரித்த ஹமீஷ், சார்லி ஒரு நாஜி என கூறியிருந்தார். சார்லியின் கொலையை கொண்டாடிய ஒருவரை NETFLIX பணியமர்த்தினால், தன்னுடைய பணம் ஒரு பைசா கூட அந்நிறுவனத்திற்கு செல்லாது என காட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 2, புரட்டாசி 16 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News October 2, 2025
அமைதி ப்ளானை நிராகரிக்கும் ஹமாஸ்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட 20 அம்ச திட்டத்தை டிரம்ப் கொண்டுவந்தார். இதற்கு இஸ்ரேல் PM நெதன்யாகு ஒப்புக்கொண்ட நிலையில், ஹமாஸ் இதற்கு இணங்க 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமைதி திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.