News September 24, 2024
இனி அனைத்து ஊர்களிலும் இசை ராஜாவின் கச்சேரி

தலைநகர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது மழை குறுக்கிட்டாலும், கலைந்து செல்லாத ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இசையை ரசித்தனர். இதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, கும்பகோண மக்களின் ஆதரவை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
இன்ஸ்டா ரீல்ஸ் பிரியர்களுக்கு செம அப்டேட்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரியர்களுக்கு அசத்தலான அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது. ரீல்ஸ்களை போஸ்ட் செய்யும்போது ‘Link a reel’ என்ற புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ரீல்ஸ்களை அடுத்தடுத்து வர வைக்க முடியும். அதாவது, புதிய ரீல்ஸை பதிவிடும்போது, இதன் மூலம் நமது முந்தைய ரீல்ஸ்களை செலக்ட் செய்ய முடியும். பின்னர் போஸ்ட் செய்தால், புதிய ரீல்ஸ்களுக்கு அடுத்து நம்முடைய பழைய ரீல்ஸ்கள் வரும்.
News August 24, 2025
பொது அறிவு வினா- விடை!

1. சுபாஷ் சந்திரபோஸ் All india forward bloc கட்சியை எப்போது தொடங்கினார்?
2. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
3. கடலின் ஆழத்தை கண்டறிய பயன்படும் கருவி எது?
4. உடலில் உள்ள கடினமான பொருளின் பெயர் என்ன?
5. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?
பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
News August 24, 2025
ராமநாதபுரத்தில் Hydro-Carbon சோதனைக்கு அனுமதி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023-ல் ஓஎன்ஜிசி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓப்புதல் அளித்துள்ளது. இயற்கை வளங்கள் அழிப்பு, உடல்நல பாதிப்பு குறித்த கவலையால் இதற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளது