News August 11, 2024

Headphone விட்டுச் சென்றதால் சிக்கிய கொலைகாரன்

image

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நடந்த இடத்தில் Bluetooth Headphone தவற விட்டுச் சென்றதே குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக மாறியுள்ளது. Headphone, CCTV ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது குறித்த விரிவான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 23, 2026

சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் தந்தை, மகனை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், கொடூரமாக அடித்து துன்புறுத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.

News March 23, 2026

த்ரிஷா எனக்கு தங்கச்சி.. கூல் சுரேஷ் கொந்தளித்தார்

image

மும்பையில் நடைபெற்ற அட்லீயின் இல்ல நிகழ்ச்சிக்கு விஜய் – த்ரிஷா இருவரும் சேர்ந்து சென்றதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கூல் சுரேஷ், விஜய் – த்ரிஷா விஷயத்தில் ஏன் வதந்தி பரப்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்யை வாழ விடுங்கள், அவருக்கு குடும்பம் இருக்கிறது என காட்டமாகக் கூறிய கூல் சுரேஷ், த்ரிஷா எனக்கு தங்கச்சி, அவரை நிம்மதியாக வாழ விடுங்கள் என்றார்.

News March 23, 2026

5 நாள்களுக்கு போரை ஒத்திவைக்கிறேன்: டிரம்ப்

image

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவருவது பற்றி ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 5 நாள்களுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் & ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என US ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என SM-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!