News March 13, 2025
லைவ் ஸ்ட்ரீமிங்கில் கொலை! Influencerக்கு நேர்ந்த கொடூரம்!

வாங்கிய கடனுக்காக இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவில் ஐரி (22), லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்தபோது, கடன் கொடுத்த டக்கனோ (42), அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். ‘ஹெல்ப்’ என ஐரியின் அலறல் சத்தம் மட்டுமே கடைசியாக கேட்டுள்ளது. அத்துடன் அவரது உயிர் பிரிந்து விட்டது. இப்போது, கடனுக்காக கொலை செய்த டக்கனோவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா? பணம் தான் திரும்ப கிடைக்குமா?
Similar News
News March 13, 2025
தமிழகத்துக்கு தெலங்கானா, கர்நாடகா ஆதரவு

சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கும், தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான கூட்டத்திற்கு தெலங்கானா & கர்நாடக அரசுகள் சம்மதித்துள்ளன. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கேரளா, பஞ்சாப் & மேற்கு வங்க அரசுகள் இதுவரை பதிலளிக்கவில்லை.
News March 13, 2025
பாஜகவில் இணைந்த சதீஷ் சிவலிங்கம்

பிரபல பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காமன்வெல்த் போட்டிகள் & காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இவர், அர்ஜுனா விருதையும் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இவரை, வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
News March 13, 2025
சிம்பு பட இயக்குநருக்கு க்ரீன் சிக்னல் காட்டுவாரா தனுஷ்?

ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் 51வது படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிம்பு ரசிகரான தனக்கு தனுஷையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். காதல், ஆக்ஷன், த்ரில்லர் கலந்த கதை ஒன்றை தனுஷிடம் கூறி இருப்பதாகவும் இயக்குநர் அஸ்வத் கூறியுள்ளார். சிம்பு பட இயக்குநருக்கு தனுஷ் க்ரீன் சிக்னல் காட்டுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்…!